Friday, March 12, 2010

> ஆடியோ வெளியிடும் ஐஸ்வர்யாராய்

ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்திருக்கும் ரெட்டச்சுழியை வெளியிடும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். முதல்கட்டமாக ஆடம்பர ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளனர்.

வரும் 15ஆம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் ஆடியோவை வெளியிடுகிறார் ஐஸ்வர்யாராய். ஆடியோவை பெற்றுக் கொள்கிறவர் வைரமுத்து.

ரெட்டச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடித்துள்ளனர். ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. தாமிரா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் வைரமுத்து பாடல் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.