மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> புதிய ஐந்து கோள்கள்

சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர்விண் தொலை காட்டி கண்டுபிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புதியகோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம்தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங் களுக்குள்இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

நமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனை விட அளவில் பெரிதாக இருக்கும் இந்தவெளிக் கோள்களுக்கு கெப்ளர் 4ஷி, 5ஷி, 6ஷி, 7ஷி, 8ஷி எனப்பெயரிடப்பட்டுள்ளன. வாஷிங்டன் டிசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனைஅறிவித்தது. இவை அனைத்தும் தமது விண் மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவை தமதுவிண்மீன்களுக்கு மிக அருகே இருப்பதாலும், இவற்றின் விண்மீன்கள் சூரியனைவிட அதிக வெப்பமுடையதாக இருப்பதாலும், கெப்ளரின் புதிய வெளிக் கோள்களின்சராசரி வெப்பநிலை மிக அதிக மாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில்எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 1,200 முதல் 1,650 வரை (2,200 - 3,000)ஆகக் காணப் படுகிறது. நாசாவின் பில் போருக்கி என்ற வானிய லாளர் ""எரிமலைக்குழம்புகளை விட இந்தக் கோள்கள் மிகவும் வெப்பம் கூடியதாக இருக்கிறது.''எனத் தெரிவித்தார். ""உண்மையில், முதல் இரண்டு கோள்களும் காய்ச்சியஇரும்பை விட அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளன. இதனால் இங்கு உயிரினங்கள்வாழமுடியாது.'' கெப்லர் விண்கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேயநேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49) விண்ணுக்கு ஏவப்பட்டது.இது வரையில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓளிப் படக் கருவிகளில் மிகவும்பெரியதை கெப்ளர் தன்னுடன் கோண்டு சென்றது. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும்ஒளியளவியின் உதவி யுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன்கோள் கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.