மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய் - அஜீத் - விக்ரம் 3 இடியட்ஸ் ரீமேக்கில் நடித்தால்

3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய் - அஜீத் - விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

சமீபத்தில் அவரிடம், "தமிழில் 3 இடியட்ஸ் செய்தால், யார் பண்ணலாம்? உங்க அபிப்ராயத்தில் யார் வர்றாங்க?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மாதவன், "கொஞ்சம் யோசிக்கவைக்கிற கேள்விதான். என்னைக் கேட்டாங்க... நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதில் ஏற்கெனவே வாழ்ந்து உயிரைக் கொடுத்துட்டேன். என் சாய்ஸ் அஜீத், விஜய், விக்ரம்தான். பிரமாதமா இருக்கும். நடிக்கிற மனசு மூணு பேருக்கும் வந்தால், அது நிச்சயம் சூப்பர் ஹிட்!" என்றார்.

3 இடியட்ஸ் ரீமேக் குறித்து ஏற்கெனவே விஜய் பேச்சு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.