பையா படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்களைவிட அதிக ஆவலாக இருக்கிறார் படத்தை இயக்கிய லிங்குசாமி. ரன், சண்டக்கோழி மாதிரி இந்தப் படமும் ரசிகர்களை கவரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் வஞ்சனையில்லாமல் வாழ்த்திக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இவரால் அதிகம் புகழப்பட்டவர் யுவன் ஷங்கர் ராஜா. பாராட்டுக்கு ரொம்பப் பொருத்தமானவர் என்று சொல்லும் அளவுக்கு எல்லாப் பாடல்களும் ஹிட். லிங்குசாமியின் பாராட்டுப் பட்டியில் அடுத்து வருகிறவர் எடிட்டர் ஆண்டனி.
வெறுமனே பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் ஆண்டனிக்கு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார் லிங்கு. தனது எடிட்டிங்கின் மூலம் படத்தை மேலும் மெருகேற்றியதற்காக இந்தப் பரிசு. படத்தின் ட்ரெய்லர் பார்த்தாலே இந்தப் பரிசுக்கு ஆண்டனி எத்தனை பொருத்தமானவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பையாவுக்கு அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். அனேகமாக அவரது திருப்பதி பிரதர்ஸே இந்தப் படத்தை தயாரிக்கும் என தெரிகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.