சுறா முடிந்துவிட்டது. நேற்று அதன் ஆடியோ வெளியீட்டு விழா. ஏப்ரல் 14 படம் திரைக்கு வருகிறது.
ஒரு படம் முடிந்து அது திரைக்கு வரும் இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்பு, நற்பணி கோலாகலம் என விஜய் தமிழகத்தை வலம் வருவது வழக்கம். வேட்டைக்காரன் ரிலீஸையொட்டி புதுக்கோட்டை, புதுச்சேரி என டூர் அடித்தவர் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை சில இடங்களில் தொடங்கி வைத்தார்.
விஜய்யின் சுறா டூர் திருச்சியில் தொடங்கியது. நேற்று திருச்சி சென்ற விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகி வீராவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மேலும் அதே மேடையில் 24 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார். இந்த 24 பேருக்கும் விஜய் செலவில் சீர்வரிசை செய்யப்பட்டது.
பிறகு ரசிகர்களிடம் பேசியவர், படத்துக்காக பல மாதங்கள் கடுமையாக உழைக்கும் தனக்கு இப்படி ரசிகர்களை சந்திப்பதுதான் உற்சாக டானிக் என்றார். இந்த இலவச திருமண விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொண்டார்.
திருச்சியில் தொடங்கிய விஜய்யின் நற்பணி டூர் சுறா ரிலீஸுக்குப் பின்பும் தொடரவுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.