மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இன்று மூன்று படங்கள் வெளியாகின்றன

இன்று மூன்று படங்கள் வெளியாகின்றன. அவள் பெயர் தமிழரசி, தம்பிக்கு இந்த ஊரு, வீரசேகரன். இந்த மூன்றில் இரண்டு கமர்ஷியல் வேல்யூவை நம்பி களம் இறங்குகிறது. கதையை நம்பி வரும் படம், அவள் பெயர் தமிழரசி.

எழுத்தாளரும், தங்கர்பச்சான், லோகிததாஸ் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபு‌ரிந்தவருமான மீரா கதிரவன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஜெய், நந்தகி நடித்துள்ளனர். காதலியை தேடி பயணமாகும் காதலனின் கதையிது.

தம்பிக்கு இந்த ஊரு படமும் காதலியை தேடி தமிழ்நாட்டுக்கு வரும் காதலனைப் பற்றியது. பரத், சனாகானுடன் மாடல் ஷா, பிரபு ஆகியோரும் நடித்துள்ளனர். பத்‌ரி இயக்கியிருக்கும் இந்தப் படத்திலும் தனது கெட்டப் காமெடியை தொடர்ந்திருக்கிறார் விவேக்.

கலை இயக்குனர் வீரசமர் ஹீரோவாக அறிமுகமாகும் வீரசேகரனும் நாளை திரைக்கு வருகிறது. வறுமை காரணமாக சுடுகாட்டில் தங்கிப் படிக்கும் மாணவராக வருகிறார் வீரசமர். நாயகி அமலாபால். பல கொலைகள் நடக்கும் ஆ‌க்சன் படமான இதனை நவி.சதிசுகுமார் இயக்கியுள்ளார்.

மாஸ் ஹீரோ, பிரபல இயக்குனர் என்று யாரும் இல்லாததால் இந்த மூன்று படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.