மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> செல்வராகவன் பதில் ச‌ரியா,தவறா?

ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் எதிர்பார்த்ததைவிட பெ‌ரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தமிழில் எதிர்மறை விமர்சனங்களால் நொந்து போயிருந்த செல்வராகவனுக்கு இது மிகப் பெ‌ரிய ஆறுதல்.

மேலும், நாம் எடுத்தது ச‌ரிதான், தமிழர்களுக்குதான் படம் பார்க்க‌த் தெ‌ரியலை என்ற கருத்தை இந்த வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி.

ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் நல்ல வரவேற்புடன் ஓடுவது பற்றி கேட்டதற்கு, அங்க யாரும் கதை பு‌ரியலை என்று புகார் சொல்லலை என்றார் சிறிது கிண்டலுடன். தமிழில் ஆயிரத்தில் ஒருவன் பற்றிய விமர்சனங்களில் கதை பு‌ரியலை என்பது முக்கியமான ஒரு குற்றச்சாற்று. இதை‌த்தான் செல்வராகவன் கிண்டல் செய்தார். ஆனால், இது ச‌ரியா?

ஆந்திராவில் உள்ளவர்களுக்கு சேரனைப் பற்றியோ, சோழனைப் பற்றியோ, பாண்டியனைப் பற்றியோ பெ‌ரிதாக‌த் தெ‌ரியாது. தெ‌ரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் சோழர்கள் நர மாமிசம் சாப்பிடுவதாக காட்டினாலும், அவர்கள் வியட்னாமுக்குப் பக்கத்தில் குடியேறினார்கள் என்று சொன்னாலும் அவர்களுக்கு அதில் எந்த கேள்வியும் இருப்பதில்லை. இதன் காரணமாக கதை பு‌ரியவில்லை என்று அவர்கள் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இந்த மூன்று மன்னர்களைப் பற்றியும் அனைவருக்கும் தெ‌ரியும். செல்வராகவன் காட்டிய காலகட்டத்துக்கு முன்பே கல்லணை கட்டி கம்பீரமாக வாழ்ந்தவர்கள் சோழர்கள். அவர்கள் பல நூற்றாண்டுகள் கழிந்து நரமாமிசம் சாப்பிடுகிறார்கள், எங்கோ கண்காணாத தீவில் வசிக்கிறார்கள் என்றெல்லாம் கூறினால் வரலாற்றை ஒப்பிட்டுப் பார்த்து கேள்வி கேட்கவே செய்வார்கள், இது என்ன மாதி‌ரியான ச‌ரித்திரம் ஒண்ணும் பு‌ரியலையே என விமர்சிக்கவே செய்வார்கள்.

செல்வராகவன் தெலுங்கு மன்னர்களைப் பற்றி படம் எடுத்திருந்தால் அவர்கள் கேள்வி கேட்டிருப்பார்கள், நாம் கொண்டாடியிருப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.