மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை

கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிம்பு நடிப்பில் வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது.

5. அசல்
அ‌ஜித்தின் 49வது படமான அசல் வசூலில் தரைதட்டியிருக்கிறது. அரத பழசான கதை, சுவாரஸியமில்லாத கதை என அசலின் எந்தப் பக்கமும் மெகா ஓட்டை. மூன்று வாரங்கள் முடிவில் இப்படத்தால் 2.30 கோடிகளை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் ஏறக்குறைய 3 லட்சங்கள்.

4. கோவா
ஹோமோ செக்சுவல் என்ற கலாச்சார அலர்‌ஜி காரணமாக ஒதுக்கப்பட்ட இந்த ஆண்டின் சிறந்த காமெடிப் படங்களில் ஒன்று கோவா. எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி இப்படம் நான்கு வார முடிவில் 1.72 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4.3 லட்சங்கள்.

3. தமிழ்ப் படம்
இதுவரை வந்த தமிழ்ப் படங்களை கிண்டல் செய்வது என்ற ஒற்றை இலக்குடன் வெளிவந்த இந்தப் படம் கோவா மீதுள்ள அதிருப்தியையும் சேர்த்து அறுவடை செய்திருக்கிறது. இதன் நான்கு வார வசூல் 2.24 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 13.4 லட்சங்கள்.

2. தீராத விளையாட்டுப் பிள்ளை
சன் பிக்சர்ஸின் அதீத விளம்பரங்கள் வீ‌ரியம் இழக்க ஆரம்பித்துவிட்டன என்பதற்கு சிறந்த உதாரணம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இரண்டு வாரங்கள் முடிவில் இந்தப் படத்தால் 1.3 கோடிகளை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 18.6 லட்சங்கள்.

1. விண்ணைத்தாண்டி வருவாயா
எவரும் எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த காதல் படத்துக்கு பட்டணத்தில் அமோக வரவேற்பு. சில ஊடகங்களின் விஷம விமர்சனத்தைத் தாண்டி இப்படத்துக்கு ரசிகர்கள் ஆதரவளித்துள்ளனர். முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 66 லட்சங்களை வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது கௌதமின் இந்தப் படம்.

இந்த வாரம் அவள் பெயர் தமிழரசி, தம்பிக்கு இந்த ஊரு, வீரசேகரன் ஆகிய படங்கள் வெளியாவதால் பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.