நடிகர்கள் பாடுவது சாதாரணமாகிவிட்டது. கமலில் தொடங்கிய இந்தப் பழக்கம் விஜய்யிடம் வியாபித்து சிம்புவிடம் வளர்ந்து பரத்திடம் பரவி விக்ரமிடம் முடிந்திருக்கிறது. கந்தசாமி படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்தார் விக்ரம்.
மேலே உள்ள நடிகர்களில் கமலும், சிம்புவும் மற்றவர்களுக்காகவும் பாடியிருக்கிறார்கள். சிம்பு தொழில்முறை பாடகர் போலவே பிற நடிகர்களின் படங்களிலும் பாட ஆர்வம் காட்டுகிறார். இந்த ஆர்வம் விக்ரமிடமும் இருக்கிறது.
விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் மதராசப்பட்டணம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் விக்ரம். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் பல்வேறு குரல்களில் விக்ரம் பாடியிருக்கிறாராம்.
மதராசப்பட்டணம் சுதந்திரத்துக்கு முந்தையை சென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.