
இந்தப் படத்தில் அசினின் பாடிகார்ட் ஆக வருகிறார் விஜய். சித்திக்கின் படத்தில் காதல், காமெடி இரண்டும் சரிவிகிதத்தில் இருக்கும். இதில் காமெடியைவிட காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக கூறினார் சித்திக். படத்துக்கு காவல்காரன் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது.

அசினின் தந்தையாக ராஜ்கிரண் நடிக்கிறார். விஜய், ராஜ்கிரண் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ராஜ்கிரணின் மனைவியாக அதாவது அசினின் தாயாக ரோஜா நடிக்கயிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு அரசியலில் பிஸியான பிறகு ரோஜா தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.