
ஆக்சன் படங்களுக்குரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்குரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்குரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்குரிய சரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை. ஆந்த வாழ்க்கையின் சிறு துளியைத் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்குரிய ஆக்கமாக இருக்கும்.
அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான். பிரபாகரனின் தீரமிகு வாழ்க்கையை டெலி சீரியலாக தயாரிக்கும் வேலையில் அவர் மும்முரமாக உள்ளார்.
இதற்காக நடிகர் பிரகாஷ்ராஜை சந்தித்துப் பேசியுள்ளார். பிரபாகரனின் வேடத்தை ஏற்று நடிக்கும்படி இந்த சந்திப்பில் பிரகாஷ்ராஜை கேட்டுக் கொண்டதற்கு நேர்மறையான பதிலே சீமானுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது பிரபாகரனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
இந்தத் தொடர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
mikavum ethirparkirom
ReplyDeleteதலைவரை கேவலப்படுத்துவதற்கு ஒரு இனம், ஒரு இயக்கம்.
ReplyDelete