மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காக்க காக்க கன்னடத்தில்

காக்க காக்க படத்துக்கு பிராந்திய எல்லை தாண்டி மவுசு இருக்கிறது. இந்தியில் இந்தப் படத்தை எடுக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கன்னடத்தில் காக்க காக்க படத்தை ‌‌ரீமேக் செய்யும் உ‌ரிமையை தயா‌ரிப்பாளர் கணேஷ் வாங்கியுள்ளார்.

காக்க காக்க தமிழில் வெற்றி பெற்றதும் அதனை கர்ஜனா என்ற பெய‌ரில் தெலுங்கில் இயக்கினார் கௌதம். வெங்கடேஷ், அசின் நடித்த இந்தப் படம் சுமாராகவே போனது. ஆனாலும் படத்தின் கதை, மேக்கிங் ஆகியவை உருவாக்கிய மோகம் இன்னும் குறையவில்லை.

கன்னடத்தில் காக்க காக்க ‌‌ரீமேக்கில் சிரஞ்சீவி சர்ஜா ஹீரோவாக நடிக்கிறார். ஜோகா நடித்த வேடத்தில் திவ்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை மாதேஷ் இயக்குகிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.