ஜெயம் படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முதல் வரிசை நடிகையானவர் சதா. அந்நியன், உன்னாலே உன்னாலே, திருப்பதி என்று இவரது சினிமா கேரியரின் கடைசி அத்தியாயம் சிறப்பாகவே இருக்கிறது. இருந்தும் தொடர்ந்து தமிழில் தலைமறைவுப் பிரதேசமாகவே இருக்கிறார் சதா.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருப்வரிடம் ஒரு மினி பேட்டி.
தமிழை மறந்துட்டீங்களே?
அப்படியெல்லாம் கிடையாது. நல்ல கதையம்சம் உள்ள, சவாலான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட சின்ன இடைவெளிதான் இது.
நீங்க தொடர்ந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா?
இதுவும் ஒரு காரணம். அப்புறம் இந்தியில் இரண்டு படங்கள் நடித்தேன். இந்தி புதுசு இல்லையா, தெரியாமல் காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டேன். அவங்க படம் முடியும் வரை வேறு படத்தில் நடிக்க முடியாமல் போயிடுச்சு.
தெலுங்கிலும் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்கிறார்களே?
அப்படியெல்லாம் இல்லை. உன்னாலே உன்னாலே, திருப்பதி படங்களுக்குப் பிறகு ஒரு தெலுங்குப் படத்தில் நடித்தேன். இந்திப் படத்துக்காக போட்ட காண்ட்ராக்ட்தான் தெலுங்கில் நிறையப் படங்கள் நடிக்க முடியாததற்கும் காரணம்.
பல வாய்ப்புகளை மறுத்த நீங்க பி.வாசு இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா?
வாசு சார் ஏற்கனவே சில படங்களில் நடிக்க என்னை அழைத்திருக்கிறார். கால்ஷீட் பிரச்சனையால் அப்போது நடிக்க முடியாமல் போயிடுச்சி. அவர் டைரக்சனில் நடிக்க முடியலையேங்கிற குறை என்னோட மனசில் இருந்துகிட்டே இருந்திச்சு. அதனால்தான் அவர் நடிக்க அழைச்சதும் உடனே ஒத்துகிட்டேன். அந்தவகையில் என் மனக்குறை தீர்ந்ததுன்னு சொல்லலாம்.
பி.வாசு இயக்கும் புலி வேஷத்தில் ஆர்கே-வுக்கு ஜோடியாக நடிக்கிறீங்க. அவர் ஏறக்குறைய ஒரு புதுமுகம் மாதிரிதான். இரண்டாவது இன்னிங்ஸை இப்படி தொடங்குவதில் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா?
அப்படியெல்லாம் நான் யோசிக்கலை. சந்திரமுகி, குசேலன் படங்களுக்குப் பிறகு வாசு சார் கன்னடத்தில் இயக்கிய ஆப்தரக்சகா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. அதனால் புலிவேஷம் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. இந்தப் படத்தின் மூலம் தமிழில் இன்னொரு ரவுண்ட் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கு.
அடிக்கடி ஒரு நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறீர்களே?
ப்ரியசகி படத்தில் நடித்த பிறகு மாதவனுடன் இணைத்து கிசுகிசு எழுதுறாங்க. அந்தப் படத்தில் மாதவனும் நானும் கணவன் மனைவியா நடிச்சிருந்தோம். கணவன் மனைவி எப்படி அன்யோன்யமா இருப்பாங்களோ அப்படி கொஞ்சம் நெருக்கமா நடிச்சது உண்மைதான். ஆனால் அந்த காட்சி படமான போது மாதவனின் மனைவியும் கூடவேதான் இருந்தாங்க. அவங்க என்னோட நல்ல ஃப்ரெண்ட்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.