
கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஆடும் வரை ஆடு என்ற தலைப்பில், விளையாட்டு துறையைப் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
பல சிறிய கிராமங்களில் உள்ள வெளி உலகுக்கு அறியப்படாத பல பி.டி.உஷாக்களை பிரபலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். உள்நாட்டு விளையாட்டு அரங்குகளில் மட்டுமின்றி வெளிநாட்டரங்குகளில் சாதனை படைத்தவர்களும் இதில் அடங்குவர்.
சமீபத்தில், தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற சென்னையைச் சார்ந்த காயத்ரி என்ற வீராங்கனைப் பற்றிய நேர்காணல், நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை அறியப்படாத பல அரிய செய்திகளோடு இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார் செய்தி தயாரிப்பாளர் சுகிர்தா.
great
ReplyDelete