பெங்களூரிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று மாலை 4 மணிக்கு ஐபிஎல் போட்டி தொடங்க இருந்த நிலையில், 3.15 மணியளவில், ஸ்டேடியத்தின் 12 ஆவது வாயிலில் திடீரென அடுத்தடுத்து இரட்டை குண்டுகள் வெடித்தன.
இதில் அந்த வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள், தனியார் பாதுகாவலர் ஒருவர் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த வெடி விபத்துக்கு அருகிலுள்ள ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக இருக்கலாம் என்றும், டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகவும் முரண்பட்ட தகவல் வெளியானது. ஆனால் வெடித்தது சக்தி குறைந்த வெடிகுண்டு என்பது பின்னரே தெரிய வந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் காவல்துறை ஆணையர் சங்கர் பிடாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெடிவிபத்து குறைந்த சக்தி கொண்டது என்றும், இருப்பினும் வெடித்தது எந்த பொருள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
12 ஆம் எண் நுழைவு வாயிலையொட்டிய சுவற்று பகுதி அருகே பிளாஸ்டிக் பைக் ஒன்றில் வெடி பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த வெடி பொருள் குறைந்த சக்தி கொண்டதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் வந்து சோதனை மேற்கொண்ட பிறகே இது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் சங்கர் பிடாரி மேலும் தெரிவித்தார்.
அவரது இந்த பேட்டி மூலம் வெடித்தது சக்தி குறைந்த வெடிகுண்டுதான் என்பது உறுதியானது.
இதனிடையே இந்த வெடி விபத்தால் கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகரிகளிடையே குண்டுவெடித்ததாக பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.
இருப்பினும் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படவில்லை.ஒரு மணி நேர தாமத்திற்கு பின்னர் ஐந்து மணிக்கு தொடங்கியது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.