கொச்சி அணி ஏலம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள சசி தரூர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "அரசியல் ஏற்றத்தாழ்வுகள் கொண்டது" என்று கூறினார்.
கொச்சி அணி ஏலம் தொடர்பாக தம்மீது கூறப்படும் குற்றச்சாற்றுக்கள் உள்நோக்கமுடையது என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும் சசி தரூர் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை பா.ஜனதா நிராகரித்துவிட்டது.
மத்திய இணையமைச்சர் சசி தரூர் பதவி விலகாதது ஏன் என்பது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சசி தரூர் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுப்பதால், இப்பிரச்னை கட்சிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று காங்கிரஸ் கருதுவதாக கூறப்படுகிறது.
இதனால் சசி தரூருக்கு ஆதரவான நிலையை மேற்கொள்ளுமாறு பிரதமரை வற்புறுத்தினால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இந்த விடயத்தில் முடிவெடுப்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடமே, கட்சித் தலைவர் சோனியா காந்தி விட்டுவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அமெரிககா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு 8 நாள் பயணமாக சென்ற மன்மோகன் சிங் இன்று நாடு திரும்பும் வழியில், விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, சசி தரூர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "அரசியல் ஏற்றத் தாழ்வுகள் கொண்டது" என்று மட்டுமே கூறினார்.
இருப்பினும் "அரசியல் ஏற்றத் தாழ்வுகள் கொண்டது" என்று பதிலளித்ததன் மூலம், இதுநாள் வரையில் ஏற்றத்தில் இருந்த சசி தரூரின் அரசியல் வாழ்க்கை அடுத்து இறக்கத்தை சந்திக்கும் - அதாவது சசி தரூரின் பதவி பறிக்கப்படும் - என்ற அர்த்தத்திலேயே பிரதமர் கூறியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.