
மணிரத்னத்தின் ராவண், ஏ.வெங்கடேஷின் மாஞ்சா வேலு, பி.வாசுவின் புலி வேஷம்... இவையெல்லாம் கார்த்திக் நடித்திருக்கும் படங்கள். இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சவார்த்தை நடந்து வருகிறது, முடிவானதும் நானே சொல்றேன் என்று கூறும் அவரது குரலில் உற்சாகம் கரைபுரள்கிறது.
புலி வேஷம் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார் கார்த்திக். படப்பிடிப்பு ஒன்பது மணிக்கென்றால் எட்டு மணிக்கே மேக்கப்புடன் ஆஜராகிவிடுகிறாராம். இந்த மாற்றத்தை கண்டு கார்த்திக்கை கட்டிப் பிடித்து கண்ணீர்விட்டிருக்கிறார் பி.வாசு.
கார்த்திக்கின் மகன் கௌதம் விரைவில் நடிக்க வருகிறார் என்று முன்பு கூறப்பட்டது. தற்போது அந்த கிசகிசு மீண்டும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது.
அலைகள் ஓய்வதில்லை ரீமேக்கில் கௌதமும், ராதா மகள் கார்த்திகாவும் நடிக்கிறார்கள் என்ற செய்தி எந்தளவு உண்மை? கார்த்திக்கிடம் கேட்டதற்கு, கௌதம் படித்துக் கொண்டிருக்கிறான். ஹீரோவாகும் அளவுக்கு அவன் இன்னும் வளரவில்லை, அவன் விரைவில் நடிக்கயிருப்பதாக சொல்வதில் உண்மையில்லை என்றார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.