விஜய்யின் ஐம்பதாவது படமான சுறாவை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படப்பிடிப்பு முடிந்த சிங்கம் படத்தின் விநியோக உரிமையையும் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இது தவிர தில்லாலங்கடி, ஆடுகளம் என அதன் வியாபார வட்டம் மிகப் பெரியது.
சுறாவை மே 1ஆம் தேதி வெளியிடுவதாக முதலில் தீர்மானித்திருந்தனர். மே 1ஆம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை அவை ரிலீஸ் ஆகும் அதே தேதியில் கேரளாவில் வெளியிட அனுமதிப்பதில்லை என்ற புது முடிவை கேரள விநியோகஸ்தர்கள் எடுத்துள்ளனர். இதற்கு கேரள திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த திடீர் சிக்கலால் சுறா மே 1ஆம் தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது. அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ராஜகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். காமெடிக்கு வடிவேலு. மலையாளத்தில் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை படத்தை மேலோட்டமாக தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

சண் என்று ஒன்று படுத்தும் பாடு இருக்கே முடியல. இப்படியே போனால் முன்னணி நாயகர்கள் ஒருபோதும் மோதவும் முடியாது உண்மை வெற்றி வெளியே தெரியாது.
ReplyDelete