தெலுங்கில் ஆர்யா வில்லனாக நடித்த வருடு ஆந்திராவில் வெளியாகி நல்ல கலெக்சனுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார் ஆர்யா. வருடு படத்தின் தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தில் 7 லட்சத்தை தரவில்லை, அதை வாங்கித் தாருங்கள் என்பது புகாரின் சாராம்சம்.
வருடு தயாரிப்பாளருடன் பேசிய நடிகர் சங்கம் 7 லட்சத்தை ஆர்யாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. சம்பள பாக்கியை ஆர்யா கறாராக வாங்கிய பிறகு அனைவர் மனதிலும் ஒரு கேள்வி. வருடு படத்துக்காக ஆர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
பலரும் பலவிதமான பதில்களை கூறுகிறார்கள். ஆனால் உண்மை...?
ஒரு கோடியே இருபத்தைந்து லட்சங்கள் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். தென்னிந்திய சினிமாவில் எந்தவொரு வில்லனும் இத்தனை பெரிய சம்பளத்தை பெற்றதில்லை என்கிறார்கள் தெலுங்குப் படவுலகில்.
வருடு படத்தில் ஆர்யா ஒப்பந்தமான போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் எதற்கு வில்லனாக நடிக்கிறார் என்று சலித்துக் கொண்டார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை என்பது இப்போதுதான் அவர்களுக்கு புரிந்திருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.