மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மகனுக்காக பாடும் இசைஞானி இளையராஜா

சில வருடங்களுக்கு முன் இசைஞானி இளையராஜாவின் மூத்த வாரிசான கார்த்திக் ராஜா பல படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருந்தார். ஆனால் தற்போது ஒன்றிரண்டு படங்கள்தான் வாய்ப்பு வருகின்றது. அதையும் சரியான நேரத்துக் இசையமைத்து‌க் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இதனால் நிறைய புது இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. சமீபத்தில் வெளியான ரெட்டச்சுழி படத்திலும் பாடல்கள், பின்னணி இசை என எதுவும் பேசப்படாததால் மேலும் வருத்தத்தில் இருக்கிறார் கார்த்திக் ராஜா.

இந்நிலையில், தற்போது ஒரு படத்திற்கு வாய்ப்பு வந்துள்ளது. அப்பட இயக்குனர் சொன்ன ஒரே கண்டிஷன், என் படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வேண்டுமென்றால், இளையராஜா சார் குறைந்த சம்பளத்திற்கு ஒரு பாடல் பாடிக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

இதை இளையராஜாவிடம் கார்த்திக் ராஜா சொல்ல, மகனுக்காக பாடித் தருகிறேன் என்றிருக்கிறார். வாய்ப்புக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்றாராம் இளையராஜா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.