சல்மான் கான், விவேக் ஓபராய்... இந்தியாவின் கொலஸ்ட்ரால் நடிகர்கள். தென்னிந்திய திரையுலகம் திரண்டு எதிர்த்த பிறகும் பாசிஸ ராஜபக்சேயின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றதோடு இல்லாமல் இதற்கு மேலும் செய்வோம் என்று ஈழத் தமிழரின் கல்லறை மீதேறி சவாலும் விட்டிருக்கிறார்கள்.
அதன்படி இலங்கை பாசிஸ அரசு ‘ஏற்பாடு’ செய்திருந்த கண் துடைப்பு கல்யாணத்துக்கு சென்று திரும்பியிருக்கிறார் விவேக் ஓபராய். அவருக்கு நான் சளைத்தவனா என்று முண்டா தட்டுகிறார் சல்மான் கான்.
தெலுங்கில் வெளியான ரெடி படத்தை தமிழில் உத்தமபுத்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்வதைப் போல் இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். அங்கு படத்தின் பெயர் அதே ‘ரெடி.’
இந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோ. ஹீரோயின் அசின். முதலில் இதன் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதாக திட்டமே இல்லை. ஐஃபா விழாவில் கலந்து கொண்ட பின் வீம்புக்காக இலங்கையில் படப்பிடிப்பை வைத்தாக வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறார் சல்மான் கான்.
மலபார் அழகி அசினும் சல்மான் கானுடன் இலங்கை செல்ல பெட்டி படுக்கையை தயார் செய்வதாக பாலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசுக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்பதை அறிந்த பிறகும் அசினின் முடிவில் மாற்றம் எதுவுமில்லை. பணத்துக்காகவும், புகழுக்காகவும் மனித நேயமற்ற கொலைகாரர்களுக்கு குடை பிடிக்கும் இது போன்ற ஜீவிகளை என்னவென்று சொல்வது?
அசினை தென்னிந்தியாவின் ஐந்து மொழிகளிலிருந்தும்; துரத்தியடிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த வேண்டுகோள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.