மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சென்னையில் Kites படக் காட்சிகள் ரத்து

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு தனது ரத்தக்கறை படிந்த கரம் உலகுக்கு தெ‌ரியாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலொன்று தற்போது கொழும்பில் நடந்துவரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா.

இந்த விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளக் கூடாது, மீறி கலந்து கொண்டால் அவர்கள் நடிக்கும் பட‌ங்களை தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநில‌ங்களில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பும், பிலிம் சேம்பரும் அறிவித்திருந்தன. இதனை மதித்து எந்த தென்னிந்திய நடிகரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

வட இந்திய நடிகர்களில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், அமீர்கான், ஷாருக்கான் போன்றவர்களும் இந்த விழாவை புறக்கணித்தனர். அதேநேரம் சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், சஞ்சய் தத், விவேக் ஓபராய், பிபாசா பாசு, லாரா தத்தா போன்றவர்கள் விழாவில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டனர்.

இந்த நடிகர்களில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் திரைப்படம் தென்னிந்தியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் உணர்வை மதிக்காத ஹிருத்திக் ரோஷனின் படத்தை திரையிடக் கூடாது என்ற நாம் தமிழர் இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று நேற்று முதல் கைட்ஸ் திரைப்பட காட்சிகள் சென்னையில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. தென்னிந்தியா முழுக்க இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

2 நான் சம்பாதிச்சது:

  1. verrrrryyyy GGGGGGOOOOOOOD
    thanks for all tamils in Tamil Nadu for ur kindful support to us.
    Eelam Tamil

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.