
இந்தப் பிரச்சனையில் ஜெயராமின் வீட்டில் தாக்குதல் நடத்தி கெட்ட பெயரை நாம் தமிழர் இயக்கம் சம்பாதித்தது. தமிழ்நாட்டின் இன்னொரு தடியெடுத்தான் கட்சியா நாம் தமிழர் இயக்கம் என்ற ஐயத்தையும் அது ஏற்படுத்தியது.
ஆனால் இலங்கை பட விழாவுக்கு எதிரான போராட்டம், ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை தமிழக திரையரங்குகளில் இருந்து தூக்கியது, ராஷபக்சேயின் வருகைக்கு எதிர்ப்பு என்று அடுத்தடுத்தப் போராட்டங்களில் அனைவரையும் சீமானின் கட்சி கவர்ந்துவிட்டது.
நாம் தமிழர் கட்சியின் அடுத்தக்குறி, ரத்த சரித்திரம். ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா, ப்ரியாமணி நடித்துள்ளனர். கூடவே கருப்பு ஆடு விவேக் ஓபராயும் நடித்துள்ளார்.
கொழும்பு மேடையில் தமிழர்களின் தாய் மாமன் நான் என்ற லெவலில் புளுகித்தள்ளிய இந்த பகல் வேஷத்தாரியின் எந்தப் படத்தையும் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் நுழையவிடக் கூடாது என்பதில் நாம் தமிழர் இயக்கம் தீவிரமாக உள்ளது.
சூர்யா, ப்ரியாமணி போன்றவர்கள் நடித்திருந்தாலும் விவேக் ஓபராய் இருப்பதால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்பதில் சீமானும் தோழர்களும் உறுதியாக உள்ளனர். ரத்த சரித்திரம் சீமானின் அரசியலில் இன்னொரு சரித்திரமாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.