மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா?

ராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரம் தமிழில் வெளியாகுமா என்றொரு நிலைமை நேற்று வரை இருந்தது. காரணம் தமிழ் அமைப்புகள் மற்றும் திரைப்பட சங்கங்கள்.

ஐஃபா விழாவில் பங்கேற்ற எந்த நடிக‌ரின் படத்தையும் தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்திருந்தன.

ஐஃபா விழாவில் முதல்தர அடிவருடியாக நடந்து கொண்ட விவேக் ஓபராய் ரத்த ச‌ரித்திரத்தில் நடித்திருந்ததால் இந்தப் படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிடக் கூடாது என்று சங்கங்கள் கூறி வந்தன.

இந்நிலையில் தம்பி சூர்யாவின் படத்துக்கு தடை சொல்ல மாட்டேன் என்று செந்தமிழன் சீமான் சொந்தத்துக்காக ஒரு பல்டி அடித்தார். ஆனாலும் தமி‌ழின உணர்வு இயக்கங்கள் ரத்த ச‌ரித்திரத்தை வெளியிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தன.

தற்போது ரத்த ச‌ரித்திரத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை துரை தயாநிதியின் கிளவுட் நைன் வாங்கியுள்ளதாம். சம்பளத்துக்குப் பதில் தமிழக விநியோக உ‌ரிமையை பெற்றிருந்த சூர்யாதான் படத்தை துரை தயாநிதிக்கு கை மாற்றியதாக கூறுகிறார்கள். படம் பெ‌ரிய இடத்துக்கு கை மாறியதால் திரைப்பட சங்கங்கள் படத்துக்கு எதிராக சுண்டு விரலை‌க்கூட அசைக்காது என்று குதூகலிக்கிறார்கள் ரத்த ச‌ரித்திர யூனிட்டை சேர்ந்தவர்கள்.

இதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.