
நடிக்கிற அத்தனை பேருடனும் கிசுகிசுக்கப்படும் ராசி ஆர்யாவுக்கு. பூஜா, சமிக்சா தொடங்கி நிலா வரை ஏராளமாக சொல்லலாம். இதில் நிலா ஆர்யா மீதான தனது அட்ராக்ஷனை ஓபனாகவே பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆர்யாவும், ஸ்ரோயாவும் சிக்கு புக்கு படத்தில் ஜோடி சேர்ந்தானர். இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுவதாகவும், பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொள்வதாகவும் ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்கள். இவை உண்மையா?
இது குறித்து கேட்டதற்கு ஆர்யாவின் பதில் இல்லை என்பதே. திருமணத்துக்கு பெண் பார்க்க வீட்டில் சொல்லியிருப்பது உண்மை. அவர்கள் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். ஸ்ரேயாவுடன் காதல் என்பதெல்லாம் சும்மா என்கிறார் சீரியசாக.
ஆனாலும், காதல் விஷயத்தில் கலையுலகினர் சொல்வதை நம்பக் கூடாது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.