மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இணைய தளங்ளில் ஏமாற்றப்படும் இந்தியகள்.

உலகம் முழுவதுமே இணைய தளக் குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றதென்றாலும், இத்தகைய சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம் குறிவைத்து மொட்டையடிப்பதென்னவோ இந்தியர்களைத்தான் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று!

இணைய தளங்களில் வலம் வரும் இந்தியர்களில் 76 விழுக்காட்டினர் கம்ப்யூட்டர் வைரஸ், ஆன் லைன் கிரெடிட் கார்டு மோசடி, வங்கி ரகசிய எண்ணை திருடி பணத்தை சுருட்டுதல் போன்ற சைபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்களுக்கு ஆட்படுபவர்களாகவே உள்ளதாம்!

சர்வதேச அளவில் இணைய தளங்களை பயன்படுத்துவோர்களில் 65 விழுக்காட்டினர் மேற்கூறிய ஏதாவது ஒரு மோசடி அல்லது பாதிப்பை எதிர்கொண்டவர்களாகவே உள்ளதாகவும், ஆனால் இந்த மோசடி இந்தியர்களை இன்னும் அதிகமாக பாதிப்பதாகவும் கூறுகிறது "நார்ட்டான் சைபர் கிரைம் ரிப்போர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை.

அதிலும் சமீப காலமாக இந்தியா முழுவதுமே பரவலாக இணைய தளங்களை பயன்படுத்துவோர்களது இமெயில் முகவரிக்கு, " உங்களுக்கு லண்டன் லாட்டரியில் இத்தனை கோடி பணம் விழுந்துள்ளது; மேற்கொண்டு விவரம் பெற இந்த முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்!" என்று கூறி ஒரு டுபாக்கூர் முகவரியை கொடுத்திருப்பார்கள் அந்த மெயிலை அனுப்பியவர்கள்!

"ஆஹா லட்சுமி தேவி கண்ண தொறந்துட்டாடா...!" என்று பதில் மெயில் அனுப்பினால், "சிக்கிட்டாண்டா ஏமாளி!" என்ற ரீதியில் வரும் பதிலில், உங்களுக்கான லாட்டரி பரிசை அனுப்பி வைப்பதற்கு சேவை கட்டணம் தேவைப்படுவதால், அதனை அனுப்பி வையுங்கள் என்று ஆளுக்கு தகுந்தபடி ஐந்து லட்சமோ அல்லது பத்து லட்சமோ குறிப்பிட்டு, ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைப்பார்கள்.சரி பரிசுதான் கோடிக்கணக்கில் வரப்போகிறதே... என்ற எண்ணத்தில் கையில் இருப்பது, வங்கியில் இருப்பது, போதாதற்கு கடன் என்று அடித்து பிடித்து அந்த தொகையை அனுப்பி வைப்பார்கள் சில அப்பாவி கோவிந்துகள்.

அததோடு சரி! பரிசு தொகை பட்டை நாமம்தான்; மேற்கொண்டு எந்த பதிலும் வராது! அதற்கு பிறகு பணத்தை அனுப்பியவர்கள் சுதாரித்து காவல்துறையில் புகார் அளித்து, பணம் போட்ட வங்கி கணக்கை ட்ரேஸ் செய்தால், அந்த பணம் வழித்து துடைக்கப்பட்டிருக்கும்;கூடவே அக்கவுண்டும் க்ளோஸ் ஆகி, வங்கியில் கொடுத்த முகவரியும் டுபாக்கூர் என்று தெரியும்.

அப்போதுதான் ஆஹா மோசம் போனமே என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள்.

இது ஒரு உதாரணம்தான்! எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர் மரணமடைந்துவிட்டார். அவருக்கு வாரிசு யாரும் இல்லை.உங்களது பெயரும் அவரது பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதை உங்களது பெயருக்கு அனுப்புகிறோம். இருவரும் பாதிப்பாதி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று கதை விட்டு மேற்கூறிய மாதிரியே சுருட்டி விடுவார்கள்.

இதுபோன்ற மோசடிகள் இன்னும் வகை வகையாய் "ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!" என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுதவிர எங்கிருந்தோ சுட்ட பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து, அவர்களை ஆபாசமாக சித்தரித்து இணைய தளங்களில் உலாவ விடுவது, படு தீவிரமாக நாம் ஒரு தகவலை பெறுவதற்காக இணைய தளங்களில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, நாம் க்ளிக் செய்யாமலேயே, கணினி திரையின் ஓரம் வந்து அழைப்பு விடுக்கும் பெண்கள் படம், அதில் சபலப்பட்டு தொடர்புகொள்பவர்கள் பணம் உள்ளிடவற்றை இழந்து, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சமயங்களில் சக்கையாய் அடி உதைபட்டு திரும்புவதும் உண்டு.

இப்படி உலக அளவில் இணைய தளங்கள் மூலமாக அதிகம் மோசடிக்குள்ளாவது இந்தியர்கள்தான் என்று கூறும் இந்த ஆய்வை நடத்திய "செக்யூரிட்டி சொலியுசன்ஸ் புரவைடர் சிமேன்டெக்" என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கவுரவ் கன்வால், இணைய தளங்கள் மூலம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 60 விழுக்காடு கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர் (malware) - தீமையை ஏற்படுத்தும் மென்பொருள் - ஆகியவைதான் என்கிறார்!

" இன்றைய சைபர் கிரிமினல்கள் குறிவைப்பது ஆன் லைனில் புதிதாக வலம் வரும் மற்றும் அப்பாவி நபர்களைத்தான்.இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள், யாரை சந்தித்து இது குறித்து முறையிடுவது என்பதை அறியாதவர்களாகவும், உதவ யாரும் இல்லை என்று நினைப்பவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் இதில் சோகமான விடயம்" என்று வருத்தம் தொனிக்க கூறுகிறார் கவுரவ்.

இப்படி யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்பது ஒருபுற இருந்தாலும், 58 விழுக்காட்டினர் அது குறித்து கோபமடைவதாகவும், 51 விழுக்காட்டினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும், 46 விழுக்காட்டினர் மனமுடைந்து அல்லது மன அங்கலாய்ப்புக்கு ஆளாகுவதாகவும் அந்த ஆய்வறிக்கை!

அதே சமயம் இதில் பெரும்பான்மையானவர்கள் - 88 விழுக்காட்டினர் - நடந்துபோன மோசடிக்கு தாங்கள்தான் காரணம் என்று தங்களைத் தாங்களே நொந்துக் கொள்கிறார்களாம்!

மேலும் இத்தகைய சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை; அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 57 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காரணங்களாலேயே இத்தகைய கிரிமினல் பேர் வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தெனாவட்டாக வளைய வருகிறார்கள்.

"இது எதுமாதிரி இருக்கிறதென்றால் கார்களை பற்றி உங்களுக்கு ஏதும் அதிகம் தெரியாத நிலையில், மெக்கானிக் என்ன சொல்கிறாரோ அதனைக் கேட்டுக்கொண்டுதான் தீர வேண்டியதிருக்கிறது. அது குறித்து அவரிடம் அதிகமாக ஏதும் வாதம் செய்ய முடியாது. அத்தகையதொரு நிலையை நீங்கள் மோசமாக கருதினாலும்; அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டுதான் தீருகிறீர்கள்.அதுபோன்ற நிலையில்தான் சைபர் குற்றங்களுக்கு ஆளானவர்களின் நிலையும்" என்கிறார் கவுரவ்.

மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்களை தீர்ப்பது இந்தியாவில் மிகக்கடினமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஒரு சைபர் குற்றத்தை தீர்க்க சராசரியாக 44 நாட்கள் ஆகின்றன.அதற்கான செலவுத் தொலையும் சராசரியாக 5,262 ஆக உள்ளது.

அதே சமயம் சர்வதேச அளவில் இது முறையே 28 நாட்களாகவும், 15,000 ரூபாயாகவும் உள்ளதாக கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.

" இதுபோன்ற இணைய தள மோசடிக்கு ஆளாகுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துப்போய் நின்றுவிடுகின்றனர்.வங்கிகள் மற்றும் அரசாங்கமும் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள போதிலும், இன்னும் அதிகமாக மேற்கொள்வது அவசியமாக உள்ளது.

" மிக லேட்டஸ்ட்டான பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவிக்கொள்வது, நிதி பரிமாற்றம் தொடர்பான விவரங்களையோ அல்லது தங்களைப்பற்றிய விவரங்களையோ ஆன் லைனில் யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, சந்தேகத்திற்குரிய மெயில்கள் மற்றும் 'லிங்' - link - குகளை திறக்காமல் இருப்பது போன்ற ஒரு சில எளிதான வழிகளில் இணைய தளங்களில் உலா வருவோர் தங்களையும், தங்களது கணினிகளையும் பாதுகாத்துக்கொள்ளலாம்" என்று கூறுகிறார் கவுரவ்!

மொத்தத்தில் இணைய தளங்களில் உலா வருபவர்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வும், சபலங்களுக்கு ஆட்படா மன உறுதியும்தான்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.