மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யின் வியாபார வேல்யூ எவ்வளவு?

ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிகபடியான வியாபாரம் விஜய் படங்களுக்கு என்பது கத்துக்குட்டி சினிமா ரசிகனுக்கும் தெ‌ரியும். தொடர் தோல்விகளுக்குப் பிறகு அவரது மார்க்கெட் வேல்யூ எவ்வளவு?

அடுத்து வெளியாகவிருக்கும் விஜய் படம் காவலன். கா‌ண்ட்ரவர்ஸி நடிகை அசின்தான் இதில் நாயகி. இயக்கியிருப்பது மலையாள பட இயக்குனர் சித்திக். மெகா அரங்குகள் போன்ற பிரமாண்டங்கள் இல்லாமல் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. அசின் நடித்திருப்பதால் படத்தை புறக்கணிப்போம் என்ற கோஷம் வெளிநாட்டில் பலமாகவும், உள்நாட்டில் பலவீனமாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இருந்தும் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ராஜாதி ராஜா, குரு சிஷ்யன் போன்ற பார்க்க முடியாத படங்களை தயா‌ரித்து இயக்கிய ஷக்தி சிதம்பரம் காவலன் படத்தின் வெளீட்டு உ‌ரிமையை வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். நாற்பது கோடி ரூபாய்க்கு காவலன் உ‌ரிமையை அவர் வாங்கியுள்ளார்.

தமிழ் விரோத செயல்களில் ஈடுபட்ட அசினின் படத்தை வாங்க எல்லோரும் தயக்கம் காட்டிய நிலையில் இப்படியொரு லம்பான தொகைக்கு காவலனை ஷக்தி சிதம்பரம் வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். இவர் தனது குரு சிஷ்யன் படத்தில் தேவையே இல்லாமல் புலி ஒன்றை காண்பித்து புல் திங்கிற புலி, சுகர் பேஷண்ட் புலி என கிண்டல் செய்து வன்மத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.