மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> திரைப்பட விழா 28ஆ‌ம் தே‌தி துவ‌க்க‌ம்.

2010 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவை மிஷ்கின் முன்னிலை வகிக்க சாரு நிவேதிதா தொடங்கிவைக்கிறார்.

அதுசரி யார் இந்த சாரு நிவேதிதா என்கிறீர்களா? இலக்கிய வட்டாரத்தினருக்கு சாரு நிவேதிதாவை நன்கு தெரியும். மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வருகிறார்.

அது இருக்கட்டும், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 14 திரைப்படங்களும், 12 குறும்படங்களும் காட்டப்போகிறார்களாம். ஜெர்மனி, ஆஸ்திரியா, கனடா, ஸ்வீடன், ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

அக்டோபர் 28 முதல் 31 வரை நடைபெறும் இவ்விழாவில், கேன்ஸ் உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வென்ற படங்களும் இடம்பெற உள்ளதாம். சினிமா நேசர்களுக்குக் கொண்டாட்டமான விஷயம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.