மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரீலீஸ் திட்டம் - பிரமாண்டம்.

மன்மதன் தன் அம்பை நாணேற்றித் தயாராக வைத்திருக்கிறாராம். எந்த நிமிடத்திலும் எய்யப்படலாம் என்று சொல்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் முத‌ல் முறையாக கமல்-த்ரிஷா இருவரும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.

எந்திரனைப் போல் இப்படத்தையும் பெரிய அளவில் வெளியிடத் திட்டம் வைத்திருக்கிறார்களாம். அதற்காக இந்தி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வருகிறது இப்படம்.

எந்திரனைவிட ஒரு தியேட்டரிலாவது அதிகமாக ரீலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் செயலில் இறங்கியிருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு. அதற்கான விளம்பரத்துக்காகவே பல கோடிகளைச் செலவிட ஆயத்தமாகி வருகிறார்களாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.