மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கிளாமர் ரோல் தேவையில்லை - பானு நட்சத்திர பேட்டி.

ஐயாவில் அறிமுகப்படுத்திய நயன்தாரா போல் இன்னொரு நடிகை வேண்டும் என்று இயக்குனர் ஹ‌ரியால் தாமிரபரணியில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பானு. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லாமல் போனது சோகம். குடும்பப் பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் இருந்தவர் அழகர்மலை, சட்டப்படி குற்றம் என மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து.

அழகர்மலைக்குப் பிறகும் உங்களை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லையே...?

நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எல்லாம் சின்னச் சின்ன ரோல்கள். அதேபோல் ஒரு பாடலுக்கு ஆடச் சொல்லி கேட்கிறார்கள். அப்புறம் வீட்டிலும் சில பிரச்சனைகள். இப்போது எல்லாம் ச‌ரியாகிவிட்டது. தொடர்ந்து நீங்கள் என்னை திரையில் பார்க்கலாம்.

சட்டப்படி குற்றம் படத்தில் சிறிய வேடத்தில்தானே நடித்திருந்தீர்கள்...?

தமிழில் நான் நடித்த இரண்டுப் படங்களிலுமே குடும்பப்பாங்கான கேரக்டர்கள்தான். சட்டப்படி குற்றத்தில் அதிலிருந்து வித்தியாசமான வேடம். கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான துணிச்சலான வேடம். அதனால்தான் ஒப்புக் கொண்டேன்.

சட்டப்படி குற்றம் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

என்னுடைய ஃபோட்டோவைப் பார்த்துதான் இயக்குனர் சார் என்னை தேர்வு செய்தார். முன்பு குண்டாக இருப்பேன். இப்போது ஸ்லிம்மாகிவிட்டேன். அந்தப் ஃபோட்டைவைப் பார்த்துதான் வாய்ப்பு கிடைத்தது.

பொன்னர் சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே?

பேசிக்கலி நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். பொன்னர் சங்க‌ரில் கிளாசிக்கல் நடனம் என்பதால் ஒப்புக் கொண்டேன். மற்றபடி சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கவோ, ஒரு பாடலுக்கு ஆடவோ கண்டிப்பாக மாட்டேன். ஒரு படம் நடித்தாலும் அது பெயர் சொல்கிற மாதி‌ரி எத்தனை வருடங்களானாலும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

தமிழில் நடிப்பதற்கும், மலையாளத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

மலையாளத்தில் நடிக்கும் போது ஒரு குடும்பமாக வேலை பார்ப்போம். ஒரு குடும்பத்தில் இருப்பது போன்று இருக்கும். தமிழில் அப்படியல்ல. ஒவ்வொருவரும் அவரவர் வேலையை மட்டும் பார்ப்பார்கள். யாருடைய வீட்டுக்கோ வந்த மாதி‌ரி இருக்கும்.

தமிழில் கிளாமர் இல்லாமல் நிலைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

கிளாமர் ரோல் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. நான்தான் அப்படியான வாய்ப்புகள் தேவையில்லை என எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. கிளாமர் இல்லாமலே என்னால் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன்.

உங்களுடைய கனவு ரோல்...?

ஃபேஷன் படத்தில் ப்‌ரியங்கா சோப்ரா நடித்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

நீலாம்ப‌ரி போன்ற வில்லி கேரக்ட‌ரில் நடிக்க ஆர்வம் உண்டா?

அந்த மாதி‌ரி கேரக்ட‌ரில் இதுவரை நான் நடித்ததில்லை. இப்போதுதான் சினிமாவில் நுழைந்திருக்கிறேன். இப்போதே அதுபோன்ற வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அது என்னை வேறு மாதி‌ரி அடையாளப்படுத்திவிடக் கூடாது. நல்ல நடிகை என்று முதலில் பெயர் எடுக்க வேண்டும், அதுதான் இப்போது எனது லட்சியம். கொஞ்சம் படங்களில் நாயகியாக நடித்துவிட்டு பிறகு வில்லி போன்ற எதிர்மறை கேரக்ட‌ரில் நடிக்கலாம்.

அடிக்கடி நீங்கள் வெளிநாடுகள் பறந்துவிடுகிறீர்களே...?

நான் கிளாசிக்கல் டான்சர் என்பதால் நிறைய புரோகிராம் செய்ய வாய்ப்புகள் வருகின்றன. அதனால் அடிக்கடி ஃபா‌ரின் சென்றுவிடுவேன். தமிழ்நாட்டிலும் டான்ஸ் புரோகிராம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.