ஒரு படம் திரையரங்குக்கு வந்த முதல் வாரத்தில் திருட்டு டிவிடிகள் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தன. இந்த கால இடைவெளி படிப்படியாகக் குறைந்து, படம் வெளியான அன்றே திருட்டு டிவிடிகள் தாராளமாக மார்க்கெட்டில் கிடைக்கத் தொடங்கின.
திறமையான திருடர்கள் ஒரு ஸ்டெப் முன்னே சென்று ஜக்குபாய் டிவிடியை படம் வெளியாகும் முன்பே ரிலீஸ் செய்து சரித்திரம் படைத்தனர். இதில் சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயண்ட் போன்ற அதிகாரமிக்கவர்களின் படங்களின் டிவிடிகள் மட்டும் மார்க்கெட்டில் விற்கப்படாமலிருந்தன. ஜனநாயகத்தில் பற்றுகொண்ட திருடர்கள் இப்போது இவர்களின் படங்களின் டிவிடிகளையும் மார்க்கெட்டில் பழக்கத்தில் விட்டுள்ளனர்.
சமீபத்தில் வெளியான கோ, வானம் படங்களின் டிவிடிகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கோ ரெட் ஜெயண்ட் ரிலீஸ். வானம் கிளவுட் நைன் வெளியீடு.
சினிமாவை திருட்டு டிவிடி திமிங்கலம் விரைவில் விழுங்கிவிடும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.