ராணா படத்தின் பிரஸ்மீட்டில், ஏதோ உலகப் படம் எடுத்தவரைப் போல் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார் கே.எஸ்.ரவிக்குமார். அந்த சந்திப்பு முழுக்க பத்திரிகையாளர்களை ஒருமையில்தான் அழைத்தார். இந்த அவமதிப்பை கண்டும் காணாதது போல் சகித்துக் கொண்டனர் பத்திரிகையாளர்கள்.
இந்த சந்திப்பில் அவர் கூறிய முக்கியமான விஷயம், என்னைக் கேட்காமல் இஷ்டத்துக்கு எழுதாதீங்க. என்னோட படத்தின் பெயர் ராணா இல்லை இரட்டைச்சுழி ரானா. உங்க இஷ்டத்துக்கு படப்பெயரை எழுதாதீங்க. காரசாரமாக பொரிந்தார் ரவிக்குமார்.
ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர்கள் வெளியிட்ட ராணா பட விளம்பரத்தில் ரவிக்குமார் சொன்ன ரானாவுக்குப் பதில் ராணா என்றே குறிப்பிட்டிருந்தனர். பிறகு ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படி எகிறினார்?
அவருக்கே இந்தக் கேள்விக்கான பதில் தெரியுமா என்பதே சந்தேகம்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.