5. ஆண்மைதவறேல்
டேக்கன், ட்ரேட் படங்களின் சாயலில் வெளிவந்திருக்கும் ஆண்மைதவறேல் சென்ற வார இறுதியில் 6.8 லட்சங்களை வசூலித்து 5வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இப்படம் 43 லட்சங்களை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
4. எங்கேயும் காதல்
பிரபுதேவாவின் இந்த காஸ்ட்லி காதல் படம் சென்ற வார இறுதியில் 7.3 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இப்படம் 3.48 கோடிகளை வசூலித்துள்ளது.
3. வானம்
சிம்பு, பரத் நடித்திருக்கும் வானம் சென்னையில் நாகரிகமான கலெக்சனை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் 9.7 லட்சங்களை வசூலித்து 3வது இடத்தைப் பிடித்திருக்கும் இப்படம் இதுவரை 4.36 கோடிகளை வசூலித்துள்ளது.
2. கோ
வானம் ரிலீஸான வாரத்தில் மட்டும் இரண்டாவது இடம் பிடித்த கோ ஆறு வாரங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் இருந்தது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 16.2 லட்சங்கள். இதுவரை 7.5 கோடிகள் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸையே மிரட்டியுள்ளது. எந்திரன், தசாவதாரம் படங்களுக்கு அடுத்து சென்னையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை கோவுக்கு கிடைத்துள்ளது. சிவாஜியைவிட கோ வசூல் அதிகம் என்பதும் முக்கியமானது.
1. ஆரண்யகாண்டம்
இந்த அற்புதமான படம் முதல் மூன்று தினங்களில் 21.6 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. படம் அபாரம் என்ற வாய்வழி விமர்சனம் காரணமாக வரும் நாட்களில் வசூல் அதிகமாக வாய்ப்புள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.