சென்ற வாரம் கோடம்பாக்கத்தை கலகலக்க வைத்த வதந்தி, ப்ரியாமணி திருமணம் செய்யப் போகிறார்.
ப்ரியாமணி காதலிக்கிறார் என்று மாதத்துக்கு ஒரு வதந்தியாவது கிளம்பும். பிருத்விராஜ் திருமணம் செய்த பிறகு இந்த காதல் வதந்தி குறைந்திருக்கிறது. இந்நிலையில்தான் இந்த திருமண வதந்தி.
இந்த வருட இறுதியில் ப்ரியாமணி திருமணம் செய்து திரையுலகுக்கு டாட்டா காட்டப் போகிறார் என்ற செய்தி கேட்டு பதறிவிட்டது கோடம்பாக்கம். உண்மை என்ன் என்று ப்ரியாமணியை தொடர்பு கொண்டு கேட்டால், கிடைத்த பதில் ஆயிரம் கிலோ ஐஸ் க்ரீமுக்கு சமம்.
எந்தவித அடிப்படையும் இல்லாத வதந்தி இது. தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கவே நேரமில்லை என்றார் ப்ரியாமணி.
இந்த விளக்கத்துக்குப் பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறது கோடம்பாக்கம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.