மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரோஜர் பெடர‌ர் - ச‌ச்ச‌ி‌ன் ச‌ந்‌தி‌ப்பு.

கிரிக்கெட் ஜ‌ா‌ம்பவா‌ன் ச‌‌‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், டெ‌ன்‌னி‌ஸ் ‌வீர‌ர் ரோஜ‌ர் பெடரரை ச‌ந்‌‌தி‌த்து பே‌சினா‌ர்.

விம்பிள்டன் ஆட்டத்தை பார்த்த தனது மனை‌வி அ‌ஞ்ச‌லியுட‌ன் இ‌ந்‌திய ‌கி‌‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர் ச‌ச்‌சி‌ன் ல‌ண்ட‌ன் செ‌ன்று‌ள்ளா‌ர். நே‌ற்று மு‌‌ன்‌தின‌ம் நட‌ந்த உலகின் 3ம் நிலை வீரரும், அதிகபட்சமாக 16 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், டேவிட் நல்பாண்டியனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறிய ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்தார்.

இந்த ஆட்டம் முடிந்ததும் ச‌ச்‌சி‌ன், ரோஜர் பெடரரை சந்தித்து அளவளாவினார். இருவரும் சுமார் 1 மணி நேரம் சுவராஸ்யமாக பேசி மகிழ்ந்தனர். டென்னிஸ் ஆட்டம் குறித்து பெரடரிடம் ச‌ச்‌சி‌ன் விசாரித்தார்.

இதேபோல் கிரிக்கெட் குறித்து பெடரர், ச‌ச்‌சி‌னிடம் கேட்டு அறிந்தார். விம்பிள்டன் பட்டத்தை வெல்ல வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சந்தித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் ஒன்றாக உணவும் அருந்தினார்கள்.

ரோஜர் பெடரருடனான தனது சந்திப்பு குறித்து ச‌ச்‌சி‌ன் டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'பெடரர் பணிவான பண்பான வீரர் ஆவார். அவர் கிரிக்கெட் குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ச‌ச்‌சினை சந்தித்தது குறித்து ரோஜர் பெடரர் தனது பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு இருக்கிறார். அதில், 'இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். நல்பாண்டியனுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதேநேரத்தில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றேன்' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.