கஜினிக்குப் பிறகு சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் எனும்போதே படத்துக்கு தனி மினுமினுப்பு. சூர்யாவுக்கு மூன்று வேடங்கள், அதில் ஒன்று புத்த பிக்கு என்ற போது தனிப்பிரகாசம். சரித்திரப் பின்னணி, தமிழர் பெருமை என எக்ஸ்ட்ராவாக பலதும் சேர... உதய சூரியன்தான் போங்கள்.
உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இசை வெளியீட்டு விழாவை 22ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். சிங்கப்பூரில் நடப்பதாக சொல்லப்பட்ட விழா நேரு உள்விளையாட்டரங்கு அல்லது மலேசியாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிற்க. அதைவிட முக்கியமான சமாச்சாரம் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. கஜினியின் சுட்டும் விழிச்சுடரிலிருந்தே இன்னும் ரசிகன் மீளவில்லை. இதில் சீன பாட்டு வேறு இருக்கிறதாம். மிக முக்கியமாக இதில் ஒரு பாடலை ஈழத்தமிழர்க்கு அர்ப்பணித்திருக்கிறார் ஹாரிஸ். அது என்ன பாடல்?
அறிய எட்டு கோடி தமிழ் ஜனமும் காத்திருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.