கமலும், கிரேஸி மோகனும் இணைந்தால் காமெடிக்கு பஞ்சமிருக்காது. சிரிப்பு கூரையை பிய்க்கும். விரைவில் இவர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்கின்றன ஆழ்வார்பேட்டையிலிருந்து வரும் தகவல்கள்.
இவர்கள் இணையும் படத்துக்கு நண்பர்களும் 40 திருடர்களும் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கமலுடன் பிரபுவும் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.
கமல் தற்போது விஸ்வரூபம் பட வேலைகளில் உள்ளார். இந்தப் படம் முடிந்ததும் நண்பர்களும் 40 திருடர்களும் பட வேலை தொடங்கும் எனத் தெரிகிறது.
vaa thalaiva
ReplyDelete