
சமீபத்தில் எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு விற்பனை இல்லையென்றும், அஜீத்தின் 50வது படத்தை வாங்க ஒவ்வொருவரும் முட்டி மோதுவதாகவும் விநியோகஸ்தர்கள் ஆச்சரியமாகத் தெரிவித்துள்ளனர்.
மங்காத்தா ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது. இதனை பத்திரிகை விளம்பரம் வழியாக சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. படத்தின் வெளிநாட்டு உரிமை மிகப் பெரிய தொகைக்கு கைமாறியிருக்கிறது. அதேபோல் உள்ளூர் விற்பனையும் கன ஜோர் என்கிறார்கள்.
மங்காத்தாவின் ரிலீஸ் தேதியை முதலில் வெளியிட்டவர்கள் கேரள விநியோகஸ்தர்கள். ஆனால் கேரளாவில் ஆகஸ்ட் 31 படம் வெளியாகுமா என்பது இன்னும் முடிவாகவில்லையாம். ஓணத்திற்கு முன்னால் லம்பாக லாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.
படம் ஹிட்...தல ஜெயிசிட்டார்....மன்றங்களை களைத்தாலும் அவருக்கு மாஸ் இருக்கிறது...ஒளிவு, மறைவற்ற அவரது நேர்மை தான் இதற்க்கு காரணமாக முடியும்.
ReplyDeleteஎனக்கு தெரிந்த வரை அவருக்கு இருப்பது வெறும் ரசிகர்கள் அல்ல..அவரது நலம் விரும்பிகளே....ரசிகர்கள்தான் ஒரு படம் ஓடாவிட்டால் ஓடிவிடுவார்கள்...
உங்கள்க்கு நன்றி... தல இந்த முறை ஏமாற்றவில்லை....மீண்டும் மீண்டும் கியூ வில் நிற்கும் கூட்டமே சாட்சி....