
மன்மதன் படத்தின் இரண்டாம் பாகமாகத் தயாராகிறது கெட்டவன். மன்மதனின் கொலையும், ரொமாண்டிக்கும் இதிலும் உண்டு.
இந்தமுறை கெட்டவனை எல்லைகள் தாண்டி கொண்டு செல்ல நினைக்கிறார் சிம்பு. அதாவது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆடியன்ஸை கவர்வது அவரது திட்டம். இதற்காக தமிழுடன், தெலுங்கு, இந்தியிலும் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.
இசை யுவன் ஷங்கர் ராஜா. ஹீரோயின்... மன்மதன் போல் யனா குப்தா, மந்த்ரா பேடி என பெரும் அழகிகளை பிடித்துப்போட திட்டமிட்டுள்ளார்.