
வெங்கட்பிரபுவின் முதல் மூன்று படங்களுக்கும் யுவன்தான் இசை. நான்காவது படம் மங்காத்தா. இதற்கும் யுவன்தான் இசையமைத்திருக்கிறார்.
இந்த நான்கு படங்களில் இரண்டு படங்களுக்குதான் யுவன் சம்பளம் வாங்கியிருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. நேற்று இந்தத் தகவலை வெங்கட்பிரபு வெளிப்படுத்தும் வரை இது யாருக்கும் தெரியாது.
சென்னை 28, சரோஜா படங்களுக்கு யுவன் சம்பளம் வாங்கவில்லை. அண்ணன் வெங்கட்பிரபுவின் படம் என்பதால் இந்தக் கரிசனம். வெங்கட்பி[ரபு ஸ்டெடி ஆகட்டும் என்ற நோக்கத்தில் சம்பளத்தை தவிர்த்திருக்கிறார். கோவா படத்தில்தான் அவர் முதல் முறையாக சம்பளம் வாங்கியுள்ளார்.
இந்தத் தகவலை வெங்கட்பிரபு நேற்றைய பிரஸ்மீட்டில் குறிப்பிட்ட போது அவரது குரலில் அளவுகடந்த நெகிழ்ச்சி.
இருக்கத்தானே செய்யும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.