
தமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயமோகன் தனது வழக்கமான பாணியை தவிர்த்து எழுதியிருக்கும் திகில் சாகஸ நாவல் உலோகம். ஈழத் தமிழர்களை வைத்து எழுதியிருக்கும் இந்த நாவலில் ஜெயமோகனின் மனம் மற்றும் கொள்கை சார்ந்து ஈழப் போராளிகளும் அவர்கள் போராட்டங்களும் மலினப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு உலகெங்குமிருந்து கண்டனங்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்த நாவலை படமாக்கும் திட்டத்தில் இருக்கிறார் சுப்பிரமணிய சிவா. திருடா திருடி, பொறி, யோகி படங்களை இயக்கியவர். இந்தக் கதையில் அனேகமாக பா.விஜய் நடிக்கக் கூடும் என்கிறார்கள். ஜெயமோகன் கருணாநிதி ஒரு இலக்கியவாதியே அல்ல என்று விமர்சித்தவர். கருணாநிதியைத் தவிர உலகில் வேறு இலக்கியவாதியே இல்லை என்று பேசுகிறவர் பா.விஜய். இவர்கள் இருவரும் ஒரே படத்தில்.
*/ஜெயமோகன் கருணாநிதி ஒரு இலக்கியவாதியே அல்ல என்று விமர்சித்தவர். கருணாநிதியைத் தவிர உலகில் வேறு இலக்கியவாதியே இல்லை என்று பேசுகிறவர் பா.விஜய். இவர்கள் இருவரும் ஒரே படத்தில்./*
ReplyDeleteஹா ஹா நல்ல combination என்ன நடக்க போகுதுன்னு தெரியல பார்ப்போம்