
7ஆம் அறிவு படத்தில் புத்த பிக்கு, விஞ்ஞானி, சர்க்கஸ் சாகஸக்காரர் என மூன்று வேடங்களில் சூர்யா நடித்துள்ளாராம். தற்காப்பு கலை பற்றிய படம் என்பதால் வெளிநாட்டில் ஒரு மாதம் தங்கியிருந்து சண்டைப் பயிற்சி எடுத்திருக்கிறார். இந்த சாகஸங்களை படத்தில் காண்பதற்கு முன் நிஜத்தில் பார்க்க ஒரு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
ரெட் ஜெயண்ட் உதயநிதி தயாரித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ விழாவை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த விழாவில் சூர்யா தனது சர்க்கஸ் சாகஸங்களை காண்பிக்க இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் தொலைக்காட்சியில் இந்த விழா ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.