மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மலேசியாவுக்கு மாறிய 7ஆம் அறிவு விழா.

சிங்கப்பூ‌ரில் எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த அதே அரங்கில் 7ஆம் அறிவு படத்தின் ஆடியோவை வெளியிடுவதாக இருந்தனர். இப்போது விழாவை மலேசியாவுக்கு மாற்றியுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை சன் வாங்கியுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவையும் அவர்களே ஒளிபரப்புகின்றனர். செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி சிங்கப்பூ‌ரில் இசை வெளியீடு என்பதே திட்டம். ஹாரிஸின் காலதாமதத்தால் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விழா செப்டம்பர் 22ஆம் தேதி நடக்கிறது, அதுவும் மலேசியாவில்.

7ஆம் அறிவு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இதனை உறுதி செய்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.