தெலுங்கில் பிரபாஸை வைத்து ரிபெல் என்ற படத்தை இயக்குகிறார் லாரன்ஸ். இதில் முதலில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. இப்போது அவருக்குப் பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்யும் யோசனையில் இருக்கிறார் லாரன்ஸ்.
தெலுங்கில் லாரன்ஸ் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட். இந்நிலையில்தான் காஞ்சனா படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கினார். இதில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட அனுஷ்கா கடைசி நிமிடத்தில் நோ சொல்ல லட்சுமிராய் நடித்தார்.
காஞ்சனாவின் தாறுமாறான வெற்றியால் லாரன்ஸின் மார்க்கெட் டாப்பில் உள்ளது. இப்போது அவரின் முறை. தனது தெலுங்குப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைப்பதாக இருந்தவர் தற்போது தமன்னாவுக்கு அந்த வாய்ப்பை தரலாமா என யோசித்து வருகிறார். அனேகமாக அவர் தமன்னாவை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.