மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌‌ஜீத் மணிரத்னம் படத்தில் ?

மணிரத்னத்தின் அடுத்தப் படம் மீனவர் பிரச்சனையை பற்றியது என்றும் இல்லை காதல் படம் என்றும் இல்லையில்லை மீனவர் பிரச்சனை, காதல் இரண்டும் கலந்தது என்றும்.... வளர்ப்பானேன் எல்லாமே குழப்பமான சங்கதிகள். உண்மை மணிரத்னத்தின் வாயால் வந்தால்தான் உண்டு. அதற்கு இப்போதைக்கு வழியில்லை.

நிற்க. இது படத்தின் கதை பற்றிய விஷயமில்லை, நடிகரைப் பற்றியது. கார்த்திக்கின் மகன் கௌதமை மணிரத்னம் அறிமுகப்படுத்தயிருப்பதாக பல காலமாக சொல்லி வருகிறார்கள். இப்போதும் அந்த பேச்சு இருக்கிறது. இந்நிலையில் பில்லா 2 படப்பிடிப்பில் அ‌‌ஜீத்தை மணிரத்னம் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு மணிரத்னத்தின் படத்தில் அ‌‌ஜீத்தை நடிக்க வைப்பதற்காகதான் என்று அடித்து சொல்கிறார்கள்.

இது இன்னொரு தகவலா இல்லை நிச்சய உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.