மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிணையில் கனிமொழி விரைவில் விடுதலை?

2ஜி ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி விரைவில் பிணையில் விடுதலையாகலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 15 பேர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 2ஜி வழக்கு தொடர்பான மூன்றாவது குற்றப் பத்திரிகையை, சிபிஐ அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ளது.மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையும் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

இந்த விசாரணை முடிந்து விட்டால் இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் பிணை கோரி மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திகார் சிறையில் 100 நாட்களுக்கும் மேலாக இருந்து வரும் கனிமொழி, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்ததும், தன்னை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுவதால், கனிமொழி இன்னும் 2 வாரங்கள் கழித்து பிணையில் விடுதலை ஆகி வெளியில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு கனிமொழி விடுதலையானால், இதே வழக்கில் அவருடன் கைதான கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரும் பிணையில் விடுதலையாவதற்கான வாய்ப்பு உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.