அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் நம்புற மாதிரி சொல்றாங்களே. பில்லா 2-வுக்குப் பிறகு ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறாராம்.
ரீமேக் செய்வதில் அதுவும் தெலுங்குப் படங்களை ரீமேக் செய்வதில் ராஜா பிஹெச்டி வாங்கியவர். கோவணத் துணியின் கலர் வரை அப்படியே உருவுவதில் வல்லவர். அவர் சொந்தமாக கதை செய்து இயக்குவது வேலாயுதம்தான் என்கிறார்கள். அதே நேரம் அதுவும் தெலுங்கு காப்பிதான் என்று அடித்துச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் மகேஷ்பாபு நடித்து இன்னும் திரைக்கு வராத டூக்குடு படத்தை ஜெயம் ராஜா அஜீத்தை வைத்து இயக்குகிறார் என கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.
இன்னும் வெளியாகாத படத்தில் நடிக்க அஜீத் எப்படி ஒத்துக் கொண்டார்? ரொம்ம்ம்ப டவுட்டா இருக்கேப்பா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.