மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ரேயா,ரீமாசென் ஹன்சிகாவுக்கு பதில்.

ராஜபாட்டை பாடல் காட்சியில் ஹன்சிகா மோத்வானிக்குப் பதில் ‌ரீமாசென், ஸ்ரேயா இருவரும் நடிக்கின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தில் தீக்சா சேத் நாயகியாக நடித்து வருகிறார். ஒரேயொரு பாடலுக்கு இதுவரை ஒரு பாடலுக்கு ஆடாத முன்னணி நடிகையை ஆட வைக்க திட்டமிட்டனர். அவர்களின் டார்கெட் ஹன்சிகா மோத்வானி.

என்ன நடந்ததோ... அவருக்குப் பதில் ‌ரீமாசென், ஸ்ரேயா இருவரையும் டிக் செய்துள்ளனர். இருவரும் பல படங்களில் ஒரு பாடலுக்கு - தனித்தனியே ஆடியவர்கள்.

‌ரீமாசென், ஸ்ரேயா விஷயத்தில் இயக்குனர் சுசீந்திரன் இன்னும் மௌனமாகவே உள்ளதால் ஆடப் போவது இவர்கள்தானா என்பதில் குழ‌ப்ப‌ம் இருப்பதாக‌‌க் கூறுகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.