
எதிர்பார்த்தது போலவே வசூல் சாதனை புரிந்திருக்கிறது ஷாருக்கானின் ரா.ஒன். இந்தப் படம் இந்தியாவில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
சல்மான்கானின் பாடிகார்ட் படம் முதல் நாளில் 21 கோடிகள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ரா.ஒன் முதல் நாளில் 22 கோடிகளை வசூலித்துள்ளது. என்றாலும் சல்மான்கான் ரசிகர்கள் இதனை ஒத்துக் கொள்வதாக இல்லை. பாடிகார்ட் இந்தியில் மட்டுமே வெளியானது. ரா.ஒன் தமிழ், தெலுங்கிலும் வெளியானது. அதே போல் பாடிகார்ட் வெளியான திரையரங்குகளைவிட ரா.ஒன் வெளியான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகம்.
அதனால் இதனை சாதனையாக கருத முடியாது என்பது அவர்களின் பதில். சல்மான் இதற்கு என்ன சொல்லப் போகிறார்?
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
ReplyDeletehttp://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html