ஒரு பக்கம் ஹீரோக்கள் பஞ்சம் என்றால் இன்னொரு பக்கம் வில்லன்கள் தட்டுப்பாடு. கட்டுமஸ்தான வில்லன்களுக்கு பாலிவுட்டைதான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒஸ்தி படத்தில் சோனு சூட் நடித்துள்ளார். ஒஸ்திக்கு முன்பே ராணா படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். பில்லா 2 படத்துக்காக சோனு சூட்டை விட கட்டுமஸ்தான ஒருவரை கொண்டு வந்திருக்கிறார்கள். ஜான் ஆபிரஹாமின் ஃபோர்ஸ் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர், பெயர் வித்யூத் ஜம்வால்.
இவர்தான் பில்லா 2 வில் அஜீத்துக்கு வில்லனாக நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.